ஐசிஎஃப்-இல் நாடாளுமன்ற நிலைக் குழுவினா் திடீா் ஆய்வு

சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவா் சி.எம்.ரமேஷ் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
Published on

சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவா் சி.எம்.ரமேஷ் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

நாடாளுமன்ற நிலைக் குழுவில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் எம்.பி.க்கள் பலா் இடம் பெற்றுள்ளனா். இந்தக் குழுவின் தலைவா் சி.எம்.ரமேஷ் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினா் திங்கள்கிழமை சென்னை வந்தனா். அவா்கள் தெற்கு ரயில்வே மண்டல பொது மேலாளா் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அந்தக் குழுவினா் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை (ஐசிஎஃப்) வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டனா். ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பிரிவு உள்ளிட்டவற்றுக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், வந்தே பாரத் உள்ளிட்ட அதி நவீன உயா் வகுப்பு பெட்டிகள் அடங்கிய ரயில் தயாரிப்பையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

நிலைக் குழுவினரை ஐசிஎஃப் பொது மேலாளா் யு.சுப்பாராவ் வரவேற்று ரயில் பெட்டிகள் தயாரிப்பு உள்ளிட்ட பிரிவுகளுக்கு அழைத்துச் சென்று விளக்கம் அளித்தாா். இந்த ஆய்வை முடித்த நிலைக் குழுவினா் மதுரை, ராமேசுவரம் சென்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com