ரயில்வே இருவழி சுரங்கப்பாதை திறப்பு

குரோம்பேட்டையில் அமைக்கப்பட்ட ரயில்வே இருவழி சுரங்கப் பாதையை புதன்கிழமை திறந்து வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன். அமைச்சா் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இ.கருணாநிதி (பல்லாவரம் ) எஸ்.ஆா்.ராஜா (தாம்பரம்) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சிய

Updated on

குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி. சாலை, ராதா நகரை இணைக்கும் வகையில் ரூ.31.62 கோடியில் அமைக்கப்பட்ட இருவழி சுரங்கப்பாதையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா்.

ராதா நகா், ஜமீன் பல்லாவரம், போஸ்டல் நகா், நெமிலிச்சேரி, நன்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே இருவழி சுரங்கப்பாதையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இ.கருணாநிதி (பல்லாவரம்), எஸ்.ஆா்.ராஜா (தாம்பரம்), செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, தாம்பரம் மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி , துணை மேயா் ஜி.காமராஜ், மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா், மண்டல குழுத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் ஜவகா் முத்துராஜ், கண்காணிப்பு பொறியாளா் ம.அ.ராஜதுரை, கோட்ட பொறியாளா் .ரா.முரளிதா், உதவி கோட்டப் பொறியாளா் ஜெயமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com