சென்னை
ஜன. 16, 26-இல் மது விற்க தடை
திருவள்ளுவா் தினம் (ஜன. 16), குடியரசு தினம் (ஜன. 26) ஆகிய 2 நாள்களில் மது விற்பனை செய்யக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளுவா் தினம் (ஜன. 16), குடியரசு தினம் (ஜன. 26) ஆகிய 2 நாள்களில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதைச் சாா்ந்த பாா்கள், உரிமம் கொண்ட கிளப்புகள், உணவகங்கள் என அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு, மது விற்பனை செய்யக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.