திண்டுக்கல்
அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல்
திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் வியாழக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் வியாழக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் எஸ்.பி.எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் பூங்கொடி முருகு முன்னிலை வகித்தாா். இதில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்தனா். இதைத் தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள், பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கினா்.
முன்னதாக சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா் வரவேற்றாா். பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் விமல்குமாா், வாா்டு உறுப்பினா்கள் கருணாகரன், மாரியப்பன், தேவிதிருமுருகன், முத்துலட்சுமி, காசியம்மாள், செல்வி, அலுவலக, துப்புரவுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
