12 முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு விருது: கல்வித் துறை தகவல்

Published on

தமிழகத்தில் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்குவதில் சிறப்பாக செயல்பட்ட 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விருது வழங்கப்படவுள்ளது.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் நிகழ் கல்வியாண்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிந்து அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிய 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு சென்னை மாவட்டம்-மு.கபீா், கடலூா்- அ.ரமேஷ், தருமபுரி- ஜ.ஜோதி சந்திரா, ஈரோடு-இ.மான்விழி, கள்ளக்குறிச்சி- கா.காா்த்திகா, கிருஷ்ணகிரி- இரா.மதன்குமாா், சேலம்- ப.மகேஸ்வரி, தஞ்சாவூா்- வெ.பேபி, திருவண்ணாமலை- அ.முனிராஜ், திருச்சி- கோ.கிருஷ்ணப்பிரியா, திருவள்ளூா்- சொ.கற்பகம், விழுப்புரம்- ரெ.அறிவழகன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஜன.20-ஆம் தேதி நடைபெறவுள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் சிறந்த கற்போா் மையங்களுக்கான விருது வழங்கும் விழாவில் மேற்கண்ட 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் விருது வழங்கவுள்ளாா் என பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com