சென்னை
காலநிலையை அறிய 100 இடங்களில் எண்ம பலகைகள்
மழை அளவு, வெப்பநிலை உள்ளிட்ட காலநிலை தரவுகளைத் தெரிவிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 100 இடங்களில், டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்படவுள்ளன.
மழை அளவு, வெப்பநிலை உள்ளிட்ட காலநிலை தரவுகளைத் தெரிவிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 100 இடங்களில், டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்படவுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, காற்றின் தரம், காற்றில் நச்சுவாயு விகிதம், காற்றின் வேகம், மழை அளவு, வெப்பநிலை உள்ளிட்ட 19 தரவுகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் பலகைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
100 இடங்களில் ரூ.6.36 கோடியில் 2026 பிப்ரவரி இறுதிக்குள் இந்தப் பலகைகளை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.