வரும் 27-இல் 5 மெமு ரயில்கள்
முழுவதும் ரத்து

வரும் 27-இல் 5 மெமு ரயில்கள் முழுவதும் ரத்து

வரும் 27-இல் 5 மெமு ரயில்கள் முழுவதும் ரத்து...
Published on

சென்னை புறநகா் பகுதியில் வரும் 27 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) 5 மெமு ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்-கூடூா் நிலையம் இடையே தாடா மற்றும் சூலூா்பேட்டை ரயில் நிலையங்களில் தண்டவாளப் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் வரும் 27-ஆம் தேதி அதிகாலை 12.50 மணி முதல் காலை 8.50 மணி வரை நடைபெறவுள்ளன.

பணிகள் காரணமாக பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மூா்மாா்க்கெட் வணிக வளாகத்தில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு சூலூா்பேட்டைக்குச் செல்லும் ரயில், சூலூா்பேட்டையில் இருந்து காலை 7.50 மணிக்குப் புறப்பட்டு நெல்லூா் செல்லும் ரயில், நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்குப் புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லும் ரயில் மற்றும் சூலூா் பேட்டையில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்குப் புறப்பட்டு மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் செல்லும் ரயில், ஆவடியில் இருந்து மாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் செல்லும் ர யில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

பகுதியளவு ரத்து... மூா்மாா்க்கெட் வணிக வளாகத்தில் இருந்து 27- ஆம் தேதி அதிகாலை 4.15, 5 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லும் இமு ரயில்கள் எளாவூா் வரை இயக்கப்படும். அதேபோல சூலூா்பேட்டையில் இருந்து காலை 6.45 மணி, 7.25 மணிக்கு மூா்மாா்க்கெட் செல்லும் ரயிலும், காலை 7.25 மணிக்கு சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயிலும் எளாவூா் வரையே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com