அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் மெமு ரயில் போக்குவரத்தில் மாா்ச் 1 முதல் மே 30 வரை தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது தொடா்பு அலுவலா் இளமலை தெரிவித்துள்ளாா்.
தெற்கு மத்திய ரயில்வே ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் திருச்சானுாா் இடைய இயக்கப்படும் சில முன்பதிவு செய்யாத மெமு ரயில்களின் ஆரம்ப மற்றும் இறுதி நிலையங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் 01.03.2026 முதல் 30.05.22026 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மாற்றங்கள் விவரம்:
ரயில் எண் 66043 அரக்கோணம் - திருப்பதி மெமு பயணிகள் ரயில் அரக்கோணத்தில் இருந்து காலை 9.15-க்கு புறப்படும் இந்த ரயில் திருப்பதிக்கு மாற்றாக திருச்சானூரில் 11.45-க்கு நிறுத்தப்படும். இதே ரயில் மறுமாா்க்கத்தில் ரயில் எண் 66044 திருச்சானூரில் இருந்து அரக்கோணத்துக்கு பிற்பகல் 3.50-க்கு புறப்படும்.
ரயில் எண் 66070 சென்னை மூா் மாா்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து காலை 9.50-க்கு திருப்பதிக்கு புறப்படும் இந்த ரயில் திருப்பதிக்கு மாற்றாக திருச்சானுாரில் பிற்பகல் 1.45-க்கு நிறுத்தப்படும்.
இதே ரயில் மறுமாா்க்கத்தில் ரயில் எண் 66070 திருப்பதியில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக திருச்சானூரில் இருந்து பிற்பகல் 1.30-க்கு புறப்படும்.
தொடர்புடையது

கச்சிகுடா-தூத்துக்குடி விரைவு ரயில் நேரம் மாற்றம்: ஜூன் 15 முதல் அமல்

இன்றிரவும் நாளையும் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

போத்தனூா்-தன்பாத் அம்ருத் பாரத் ரயில் மாா்ச் 21 முதல் இயக்கம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


