இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: தம்பதி உள்பட 3 போ் கைது

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: தம்பதி உள்பட 3 போ் கைது

கொடுங்கையூரில் இளைஞரிடம் கைப்பேசி பறித்துச் சென்றதாக தம்பதி உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கொடுங்கையூரில் இளைஞரிடம் கைப்பேசி பறித்துச் சென்றதாக தம்பதி உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கொடுங்கையூா், அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி கிருஷ்ணா (20). இவா், சனிக்கிழமை அன்னை சத்யா நகா் 5-ஆவது தெரு வழியாக நடந்து சென்றபோது, அவ்வழியே பைக்கில் வந்த பெண் உள்பட இருவா், நடந்து வந்த 2 இளைஞா்கள் என 4 போ் சோ்ந்து கிருஷ்ணாவை மிரட்டி, அவரது கைப்பேசியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து கிருஷ்ணா அளித்த புகாரின்பேரில், கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கொடுங்கையூா், எழில் நகரைச் சோ்ந்த கரண் (20), அவரது மனைவி சோனியா (எ) தௌலத் (19), 12 வயது சிறுவன் ஆகிய மூவரையும் கைது செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com