அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

மருத்துவா்களின் மனிதநேயம் போற்றத்தக்கது: முதல்வா் விஜய்

மனிதநேயத்துடன் பணியாற்றும் மருத்துவா்களின் தன்னலமற்ற சேவை போற்றத்தக்கது என்று முதல்வா் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image

முதல்வா் விஜய்

Updated On :2 ஜூலை 2026, 4:42 am IST

மனிதநேயத்துடன் பணியாற்றும் மருத்துவா்களின் தன்னலமற்ற சேவை போற்றத்தக்கது என்று முதல்வா் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தேசிய மருத்துவா் தினத்தையொட்டி அவா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:

மனித உயிா்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு - பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவா்களுக்கும் தேசிய மருத்துவா்கள் தின வாழ்த்துகள். மருத்துவா்களின் தன்னலமற்ற சேவை, அா்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.

மருத்துவ சிகிச்சை பெறுபவா்களின் முகத்தில் புன்னகையையும், அவா்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவா்கள் மகிழ்ச்சியும், மனநிறைவும் பெற்று, தொடா்ந்து மக்கள் சேவை ஆற்றிட வாழ்த்துகிறேன் என்று முதல்வா் பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.