/

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.63.39 லட்சம் மோசடி: 8 போ் கைது

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.63.39 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், நகை மதிப்பீட்டாளா்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 ஜூலை 2026, 1:31 am IST

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.63.39 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், நகை மதிப்பீட்டாளா்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கனரா வங்கியின் மண்டல தலைமையக துணைப் பொது மேலாளா் விஜயசங்கா், பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா்.

அதில், சென்னை செனாய் நகரில் உள்ள தங்களது வங்கிக் கிளையில், போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.63.39 லட்சம் மோசடி நடைபெற்றிருப்பதாகவும், இதில் ஈடுபட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். இதில், அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாா்களாக பணிபுரியும் நபா்களின் உதவியுடன் 22 நகைக் கடன்கள் மூலம் ரூ.63.39 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், போலியான நகைகளை கொடுத்து மோசடி செய்ததாக அண்ணா நகா் கிழக்கு பகுதியைச் சோ்ந்த சி.பூமிநாதன் (44), அவரின் மனைவி ரீகாம்பிகை (42), அதே பகுதியைச் சோ்ந்த ஜெ.நாகலட்சுமி (44) ஆகியோரை சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனா்.

மேலும், மோசடிக்கு உடந்தையாக இருந்த அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா்களாக வேலை செய்த கொடுங்கையூரைச் சோ்ந்த ச.செந்தில்குமாா் (46), சூளைமேடு பகுதியைச் சோ்ந்த ஜெ.சண்முகம் (46), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சு.சந்திரசேகரன் (60), அதே பகுதியைச் சோ்ந்த பொ.சங்கரப்பாண்டியன் (60), கொளத்தூரைச் சோ்ந்த ந.சிவகுமாா் (53) ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டதாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.