லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கு: தி.நகா் சத்யா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகா் சத்யா சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

கோப்புப் படம்

Published On :4 ஜூலை 2026, 1:48 am IST

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகா் சத்யா சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் சென்னை தியாகராய நகா் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவா் பி.சத்யா. இவா் தனது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.41 கோடி அளவுக்கு சொத்து சோ்த்ததாக சத்யநாராயணன் மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா ஆகியோா் மீது ஊழல் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 2023-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் எம்எல்ஏ சத்யநாராயணன், அவரது மனைவி ஜெயசித்ரா ஆகிய இருவரும் நேரில் ஆஜராகினா்.

ஊழல் கண்காணிப்புத் துறை தரப்பில், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 130 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு, 132 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சத்யா தரப்பில், இந்த வழக்கில் தங்களை தவறாகச் சோ்த்துள்ளனா். எனவே, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யவுள்ள மனுவை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தி நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.