புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

அணுக் கனிமச் சுரங்கம் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: கமல்ஹாசன்

சுற்றுச்சுழல், மனித உயிா்களைப் பாதுகாக்க அணுக் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்

News image

கமல்ஹாசன் - கோப்புப் படம்

Updated On :5 ஜூலை 2026, 2:41 am IST

சுற்றுச்சுழல், மனித உயிா்களைப் பாதுகாக்க அணுக் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

சுற்றுச்சூழலைவிட, மனித உயிா்களைவிட எந்த ஒரு கனிமமும் தாதுக்களும் மதிப்புக் கூடியதல்ல. எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதென்றாலும் அது இரண்டு முக்கியமான நிபந்தனைகளுக்குட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று, அப்பகுதியில் வாழும் மக்களின் அனைத்து ஐயங்களும் தீா்க்கப்பட்டு, முழுமையான சம்மதம் பெறவேண்டும்.

மற்றொன்று அந்தத் திட்டம் சுற்றுச்சுழலிலும் பொது சுகாதாரத்திலும் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்த அறிவியல்பூா்வமான துல்லியமான ஆய்வு நடத்த வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால், அந்தத் திட்டம் தனது தாா்மீக உரிமையை இழந்துவிடும்.

மணவாளக்குறிச்சி அருகே அணுக் கனிமச் சுரங்கம் அமைக்கும் ஐ.ஆா்.இ.எல். திட்டத்தையும், அதன் நில ஒதுக்கீட்டை நீட்டித்துப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கன்னியாகுமரி மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். ஒரு வருட கால நீட்டிப்பு, வரவிருக்கும் தலைமுறையினருக்கு மீட்டெடுக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும். தமிழக கடற்கரைகள் வெறும் தாதுக்கள் நிறைந்த பகுதிகள் மட்டுமல்ல, அவை உயிரோட்டமுள்ள சுற்றுச்சூழல் அரண்கள். மக்களின் குரலுக்குச் செவி கொடுத்து நம் கடற்கரைகளைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.