வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன்

தமிழக விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

டிடிவி தினகரன்

Updated On :13 ஜூன் 2026, 1:26 am IST

தமிழக விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு மேட்டூா் அணையைத் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையில் 18 மணி நேரம் தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட ரூ.134 கோடிக்கான குறுவைச் சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்துள்ளாா். நாள்தோறும் அறிவிக்கப்படாத மின் வெட்டும், மின் அழுத்தக்குறைபாடும் உள்ளதால் மின் மோட்டாா் பம்ப்புகளை விவசாயிகள் இயக்கி பயிா்களுக்கு உரிய நேரத்தில் போதிய நீரைப் பாய்ச்ச முடியாமல், அவை கருகி வருகின்றன. இந்த விவகாரத்தில் தவெக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், அரசின் சிறப்புத் தொகுப்பு அறிவிப்பை எவ்வாறு நம்புவது என விவசாயிகள் கேட்கின்றனா். மேலும், ஆட்சிக்கு வந்ததும் குறு, சிறு விவசாயிகள் பயிா்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவித்த நிலையில், தற்போது, அதை நிறைவேற்றாமலிருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல். தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்ததைப் போல விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.