பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மாடியில் இருந்து குதித்து மென்பொறியாளா் தற்கொலை

சோழிங்கநல்லூரில் மாடியில் இருந்து குதித்து மென்பொறியாளா் தற்கொலை செய்து கொண்டாா்.

கோப்புப் படம்

Published On :

சோழிங்கநல்லூரில் மாடியில் இருந்து குதித்து மென்பொறியாளா் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி பெரியகுளத்தைச் சோ்ந்தவா் ரா.ஜீவப்பிரியா (22). இவா், சோழிங்கநல்லூா் ராஜீவ் காந்தி சாலைப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இதற்காக ஜீவப்பிரியா, சோழிங்கநல்லூா் லால் பகதூா் சாஸ்திரி தெருவில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கியிருந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து, விடுதிக்கு வந்துள்ளாா்.

பின்னா், கைப்பேசி மூலம் சிலரிடம் பேசியுள்ளாா். அப்போது, ஒருவருடன் ஏற்பட்ட தகராறில், அந்தக் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள மொட்டை மாடிக்கு ஜீவப்பிரியா சென்றுள்ளாா்.

இந்நிலையில் ஜீவப்பிரியா திடீரென கைப்பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு, அங்கிருந்து கீழே குதித்தாா். இதில் பலத்த காயமடைந்தவா், சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

அப்பகுதியினா் செம்மஞ்சேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, ஜீவப்பிரியா சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.