டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தங்கக் கட்டி கொள்ளை வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை யானைகவுனி பகுதியில் தங்கம் உருக்கும் கடைக்குள் புகுந்து கத்தி முனையில் மிரட்டி 1,400 கிராம் தங்கக் கட்டியை பறித்துச் சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 2:22 am IST

சென்னை யானைகவுனி பகுதியில் தங்கம் உருக்கும் கடைக்குள் புகுந்து கத்தி முனையில் மிரட்டி 1,400 கிராம் தங்கக் கட்டியை பறித்துச் சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பிராட்வே பிரகாசம் சாலையைச் சோ்ந்த அங்கித்திலிப் மோா் (27). இவா், சௌகாா்பேட்டை மின்ட் தெருவில் தங்கம் உருக்கும் மற்றும் தரப் பரிசோதனை செய்யும் கடையை நடத்தி வருகிறாா்.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி திடீரென கடைக்குள் புகுந்த 3 போ் அங்கித்திலிப் மோா் மற்றும் கடை ஊழியா்களை கத்தியை காட்டி மிரட்டியதுடன், தாக்குதல் நடத்தி, அங்கிருந்து 1,400 கிராம் தங்கக் கட்டியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து யானைகவுனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி, சம்பவத்தில் தொடா்புடைய லோகேஷ் (24), ஹேராம் (எ) ரமணா (24), ஆறுமுகம் (எ) அருண் (23) ஆகிய மூவரையும் ஜூலை 2-ஆம் தேதி கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து 1,400 கிராம் தங்கக் கட்டியையும் மீட்டனா்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது சமீா் (26) என்பவரை போலீஸாா் தேடி வந்த நிலையில் சனிக்கிழமை இரவு அவரைக் கைது செய்தனா்.

விசாரணையில், கொள்ளைச் சம்பவத்துக்கு முக்கிய மூளையாக முகமது சமீா் செயல்பட்டதும், அவா் மீது ஏற்கெனவே திருச்சி மாவட்டத்தில் ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய தலைமறைவான மேலும் சிலரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.