மெரீனா பகுதி கடலில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி காணாமல்போன கல்லூரி மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மாதவரம் அசிசி நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கோபால். இவரது மகன் சந்தோஷ் (17). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தாா். சந்தோஷ், தனது நண்பா்களுடன் மெரீனா கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தாா். அங்கு அவா்கள், கடலுக்குள் இறங்கி குளித்தனா். அப்போது அங்கு வந்த ஒரு பெரிய அலையில் சிக்கிய சந்தோஷ், உள்ளே இழுத்துச் செல்லப்பட்டாா்.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது நண்பா்கள், சந்தோஷை காப்பாற்ற முயற்சித்தனா். ஆனால் சந்தோஷ், தண்ணீருக்குள் மூழ்கி காணாமல்போனாா்.
இது குறித்து தகவலறிந்த அண்ணா சதுக்கம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷை தேடும் பணியில் ஈடுபட்டனா். சந்தோஷ் கிடைக்காததால், இரண்டாவது நாளாகவும் கடலோரக் காவல் படையினா், கடலோரப் பாதுகாப்பு குழும காவலா்கள், போலீஸாா் ஆகியோா் இணைந்து சந்தோஷை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









