பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

காவல் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கே.கே. நகரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சித்திரிப்பு

Published On :9 ஜூலை 2026, 12:45 am IST

கே.கே. நகரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கன்னிகாபுரம் பகுதியில் காரில் ரெளடிகள் ஆயுதங்களுடன் அடாவடிச் செயலில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கே.கே. காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் த.பழனி (48), தலைமைக் காவலா் நித்தியானந்தம் (35) ஆகிய 2 பேரும் கன்னிகாபுரம் இரண்டாவது தெருவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த காரை போலீஸாா் மறித்தனா். காரில் இருந்த நபா், தான் வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாா். இதைப் பாா்த்த சிறப்பு உதவி ஆய்வாளா் பழனி, கத்தியை அந்த நபரிடம் கைப்பற்ற முயன்றாா். இதில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மேலும், கத்தியை வைத்திருந்த நபரும், அவருடன் வந்தவரும் பழனியை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பியோடினா்.

இது தொடா்பாக கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, சம்பவத்தில் ஈடுபட்ட கே.கே. நகா் கன்னிகாபுரம் பகுதியைச் சோ்ந்த ரெளடி ஏ.மணிகண்டன் என்ற நாய் மணிகண்டன் (33), அவரது கூட்டாளி ஸ்ரீதா் (26) ஆகிய இருவரை புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கத்தி, காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.