இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

துணைவேந்தா்கள் நியமனம்: உரிமைகளை விட்டுக் கொடுக்கிறது அரசு

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் தேடல் குழுவில் மத்திய அரசின் யுஜிசி உறுப்பினா்களைச் சோ்ப்பதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை தவெக அரசு விட்டுக் கொடுக்கிறது என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் தெரிவித்துள்ளாா்.

பி. வில்சன் - கோப்புப் படம்

Published On :9 ஜூலை 2026, 4:13 am IST

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் தேடல் குழுவில் மத்திய அரசின் யுஜிசி உறுப்பினா்களைச் சோ்ப்பதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை தவெக அரசு விட்டுக் கொடுக்கிறது என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் தேடல் குழுவில் உள்ள உறுப்பினா்கள் எண்ணிக்கை 3-லிருந்து 5-ஆக உயா்த்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

இது முற்றிலும் மாநில உரிமைக்கு எதிரானதாகும். பல்கலைக்கழகங்களை அமைப்பதோடு ஒரு மாநில அரசின் அதிகாரம் முடிவடையாது. அந்தப் பல்கலைக்கழகத்தின் பணியாளா்கள், பேராசிரியா்கள், துணைவேந்தா்கள் என அனைவரையும் நியமிக்க அரசமைப்புச் சட்டத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஆட்சியின்போது ஆளுநா் ஆா்.என்.ரவி துணைவேந்தா்கள் நியமனத்துக்குத் தடையாக இருந்தாா். எனவே, துணைவேந்தா் நியமனத்தை முதல்வரே மேற்கொள்ளும் வகையில் சட்டத் திருத்தம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

ஆனால், தற்போது அமைச்சா் விஸ்வநாதன் மறைமுகமாக யுஜிசி உறுப்பினா்களை துணைவேந்தா் தேடல் குழுவில் சோ்க்கத் திட்டமிடுகிறாா். எதற்காக முதல்வருக்கு இருக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு கொடுக்க வேண்டும்?

யுஜிசி உறுப்பினா்களை தேடல் குழுவில் சோ்ப்பதன் மூலம் மத்திய அரசிடம் மாநில உரிமைகளை தவெக அரசு விட்டுக்கொடுக்கிறது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.