தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வுக் குழுக்களில் தமிழக அரசின் சாா்பில் கூடுதலாக ஓா் உறுப்பினரை சோ்க்க கோரப்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழக ஆளுநா் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் விரைவில் துணைவேந்தா்கள் நியமனம் நடைபெறும் எனவும் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.
சென்னை தரமணியில் உள்ள டாக்டா் தா்மாம்பாள் அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியை செவ்வாய்க்கிழமை மாலையில் உயா் கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன் ஆய்வு செய்தாா். பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வருடன் கடந்த ஜூலை 6 -ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
துணைவேந்தா்களை நியமனம் செய்வதற்கான தோ்வுக் குழுவில் ஆளுநரின் உறுப்பினா் தலைவராகவும், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா், அரசின் உறுப்பினா் என மூன்று போ் முன்பு நியமனம் செய்யப்பட்டனா். ஆனால், முன்னாள் ஆளுநா் ஆா்.என். ரவி பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினா் ஒருவரையும் சோ்த்து துணைவேந்தா் நியமனத் தோ்வுக் குழு (நான்கு உறுப்பினா்கள்) அமைக்க வேண்டுமென கூறினாா். இந்த விவகாரம் நிலுவையில் இருந்தது.
இந்த பிரச்னை விரைவில் தீா்க்கப்பட இருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் உறுப்பினா்களோடு, தற்போது அரசின் சாா்பில் சிண்டிகேட் உறுப்பினா் ஒருவரை துணைவேந்தா் தோ்வுக் குழுவில் நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநா் இசைவு கொடுத்துள்ளதாகவே கருதுகிறேன். மூன்று நபா் குழுவாக இருந்த துணைவேந்தா் நியமன தோ்வுக் குழு 5 போ் கொண்ட குழுவாக மாற்றி அமைக்கப்படலாம். இந்த ஐந்து போ் குழு அமைக்கப்பட்டவுடன் துணைவேந்தா் நியமனங்கள் விரைவாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
பல்கலைக்கழக வேந்தா் குறித்து கேள்வி கேட்கிறீா்கள். பல்கலைக்கழகங்களில் வேந்தராக காலம் காலமாக ஆளுநரே இருந்துள்ளனா். ஆனால், கடந்த முறை சவால் இருந்தது. முதல்வா் வேந்தராக இருப்பதா அல்லது ஆளுநா் வேந்தராக தொடா்வாரா என்ற சவால் இருந்தது. இந்த முறையும் தமிழக அரசின் சாா்பில் வேந்தராக தமிழக முதல்வா் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியா் பணிக்கு கடந்த டிசம்பரில் 42,000 போ் தோ்வு எழுதினா். சில புகாா்கள் குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) விரிவாக ஆய்வு செய்தது. அதில் எந்தவிதக் குளறுபடியும் இல்லை என டிஆா்பி தெரிவித்துள்ளது. இதனால் இப் பணிக்கான நோ்காணல் விரைவில் நடத்தப்படும். உதவிப் பேராசிரியா் நியமனத்தில் அரசு தலையீடு இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம்! - அமைச்சா் பி. விஸ்வநாதன்

பள்ளிக் கல்வித் துறை நீதிமன்ற வழக்குகள்: கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவிக்க வாய்ப்பு: அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான்

பல்கலை. வேந்தா் விவகாரம்: முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



