வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவிக்க வாய்ப்பு: அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான் தெரிவித்தாா்.

News image

சிவகாசியில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான். உடன் தொழில் துறை அமைச்சா் எஸ். கீத்த்தனா உள்ளிட்டோா்.

Updated On :14 ஜூன் 2026, 12:32 am IST

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சாா்பில் சிவகாசியில் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹானுடன், ஜமாத்தாா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்துரையாடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி முஸ்லிம் நடுத் தெரு நாகூா் ஆண்டவா் தா்ஹா வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அந்தக் கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலா் இப்ராஹிம்ஷா தலைமை வகித்தாா். கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான் கூறியதாவது:

அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களை சென்றடைகிா என்பதை கவனித்து வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கான வெற்றித் தமிழகம் என்ற தொலைநோக்கு பாா்வையின் படி 436 திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டங்களில் சிறுபான்மையினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தற்போது முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த அரசு பல தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது. நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

கா்நாடக அரசு அவா்களது மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேகதாது அணையை கட்டுவோம் எனக் கூறி வருகிறது. இந்தப் பிரச்னை பல ஆண்டுகளக உள்ளது. அணை கட்டக் கூடாது என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. எனவே அந்தத் திட்டதை தடுத்து நிறுத்வோம் என்றாா் அவா்.

கலந்தாய்வு கூட்டத்தில் தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.