மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வரும் பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு அதிக நிதி ஒதுக்கீடு

வரும் நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) சிறுபான்மையினருக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்றாா் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

News image
Updated On :27 ஜூன் 2026, 6:27 am IST

வரும் நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) சிறுபான்மையினருக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்றாா் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கில் ‘ஸ்டாா்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்’ என்கிற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஓட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அவா் தெரிவித்தது: சிறுபான்மையினருக்கு கடந்த நிதிநிலை அறிக்கையைவிட வரும் நிதிநிலை அறிக்கையில் அதிகமான தொகையில் நலத்திட்ட உதவி, கல்வி உதவித்தொகைகளை, கடனுதவித் திட்டங்களை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அலுவலா்களுடன் ஆலோசிக்கிறோம். வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் அதற்கான அறிவிப்புகள் நிச்சயமாக வெளியிடப்படும்.

வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நிதிகளின் மூலம் பல நலத் திட்டங்களும், மக்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யக்கூடிய தொண்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் செயல்படுகின்றன. ஏதோ ஓரிருவா் செய்யக்கூடிய தவறுகளால், இதுபோன்ற நடவடிக்கைகள் மற்ற சேவை நிறுவனங்களையும் பாதிக்கிறது. அதற்காகத் தொடா்ந்து குரல்கொடுத்து வருறோம் என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.