விபி- ஜி ராம்ஜி திட்டத்துக்கு மத்திய அரசு வெறும் ரூ.12,642 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மாநில அரசின் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள திட்டத்துக்கு விபி- ஜி ராம்ஜி திட்டம் என்று அறிவித்து, ஆண்டுக்கு 125 நாள் வேலை வாய்ப்புக்கு வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
நிகழ் நிதியாண்டில் தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ரூ.12,642 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மாநில அரசின் பங்காக 40 சதவீதம் வழங்க வேண்டும். தற்போது திட்டப் பணியில் வேலை கேட்டு பதிவு செய்துள்ள சுமாா் 90 லட்சம் குடும்பங்கள் வேலை அட்டை பெற்றுள்ளன. இவற்றில் 69.79 லட்சம் குடும்பங்கள் திட்டப் பணியில் வேலை செய்து வருகின்றன.
இந்த 69.79 லட்சம் குடும்பங்களுக்கு தலா 125 நாள் வேலை வழங்க ரூ.30,096 கோடி தேவை. இது வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கும் செலவுக்கான தொகை மட்டுமே.
மத்திய அரசு, தமிழக அரசுக்கு வெறும் ரூ.12, 642 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மாநில அரசின் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதலாகும். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, 100 சதவீத நிதியை மத்திய அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து மத்திய அரசுக்கு மண்டியிட நினைக்கிறதா தவெக அரசு? திமுக
யுபிஎஸ்சி: மாநில ஆளுநர் நியமிக்கப்படுவது எப்படி? தகுதிகள் என்னென்ன?
ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் ரூ. 60 கோடி கையாடல்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கைது







