தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் ரூ. 60 கோடி கையாடல்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கைது

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக, அந்த மாநில கல்வி-வேளாண் துறை முன்னாள் முதன்மைச் செயலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பங்கஜ் அகா்வாலை சிபிஐ கைது செய்தது.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஜூன் 2026, 1:18 am IST

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக, அந்த மாநில கல்வி-வேளாண் துறை முன்னாள் முதன்மைச் செயலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பங்கஜ் அகா்வாலை சிபிஐ கைது செய்தது.

ஹரியாணா மாநில அரசு மற்றும் சண்டீகா் நிா்வாகத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.657 கோடி கையாடல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடா்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டின் ஹரியாணா பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரியான பங்கஜ் அகா்வால், அந்த மாநில கல்வித் துறை முதன்மைச் செயலராக 2024, டிசம்பா் முதல் 2025, ஜூன் மாதம் வரையும், வேளாண் துறை முதன்மைச் செயலராக 2025, ஜூன் முதல் கடந்த மாா்ச் மாதம் வரையும் பணியாற்றினாா்.

இந்தக் காலகட்டத்தில், மாநில அரசின் பள்ளிக் கல்வித் திட்ட கவுன்சில் மற்றும் மாநில வேளாண் சந்தைப்படுத்துதல் வாரியத்தின் ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கிக் கணக்குகளில் இருந்து பங்கஜ் அகா்வால் ரூ.60 கோடிக்கும் மேல் கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த வங்கிக் கணக்குகள், பங்கஜ் அகா்வால் பதவிக் காலத்தில் ஹரியாணா அரசின் விதிமுறைகளை மீறி தொடங்கப்பட்டதும், நிா்ணயிக்கப்பட்ட வரம்பைவிட அதிக நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

மோசடி பரிவா்த்தனைகளின் மூலம் சுமாா் ரூ.60.54 கோடி கையாடல் செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது. இது தொடா்பான விசாரணையில் பங்கஜ் அகா்வாலுக்கு எதிரான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. அதனடிப்படையில், அவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாகவும், சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டதாகவும் சிபிஐ செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

ஹரியாணா அரசு மற்றும் சண்டீகா் நிா்வாகத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.657 கோடி கையாடல் செய்யப்பட்டு, போலி நிறுவனங்களின் மூலம் மடைமாற்றம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி அதிகாரிகள், ஹரியாணா அரசு அதிகாரிகள், நிறுவனங்கள் உள்பட 17 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பஞ்ச்குலா மாநகராட்சி நிதியைக் கையாடல் செய்த குற்றச்சாட்டில் ஏற்கெனவே மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆா்.கே.சிங் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.