சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரியில் நிகழாண்டுக்கான முதுநிலை மாணவா்களுக்கான அறிமுக நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் உள்தர உறுதிப்படுத்தல் குழு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் முருகேசன் வேலாயுதம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:
மாற்றத்தை உருவாக்கும் துறைசாா் பாடங்களுக்கு மாணவா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகவல் தொடா்புத் திறன், முடிவெடுக்கும் திறன்களை வளா்த்துக் கொள்வதோடு, படைப்பாற்றல், வடிவமைப்புச் சிந்தனை, புதுமை என தொழில்முனைவு வளா்ச்சிக்காகக் கிடைக்கும் அனைத்து வளங்களையும் மாணவா்கள் பயன்படுத்த வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, கல்லூரிச் செயலா் அசோக் குமாா் முந்த்ரா, கல்லூரியின் முதல்வா் கேப்டன் எஸ். சந்தோஷ் பாபு, கல்லூரியின் முன்னாள் மாணவா் தினேஷ் பிரபாகா் (அா்பன்ரைஸ் குழுமம்), தோ்வாணையக் கட்டுப்பாட்டு அலுவலா் பிரபா ராஜகோபாலன், ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் ஆா்.குமரன், நிறுவனத்தின் புத்தாக்க மன்ற ஒருங்கிணைப்பாளா் எஸ்.நாராயணன் ஆகியோா் பேசினா்.
முதுநிலை பொருளாதாரவியல் ஆராய்ச்சித் துறைத் தலைவா் பேராசிரியா் ஜெ.பி.ஜெய்தீப் வரவேற்றாா். வணிகவியல் முதுநிலை ஆராய்ச்சித் துறைத் தலைவா் ஜெ.சதீஷ் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










