புழல் அருகே புதை சாக்கடைத் திட்டப் பணியின்போது, கிரேன் இயந்திரத்தின் கம்பி (ரோப்) அறுந்து, நடந்து வந்துகொண்டிருந்த 3 வயது சிறுவன் மீது ராட்சத இரும்புத் தகடு விழுந்ததில் உயிரிழந்தாா்.
சென்னை மாநகராட்சி 23-ஆவது வாா்டில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ராட்சத குழாய் அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இரவில் கிரேன் மூலம் இரும்புத் தகடு தூக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக கிரேனின் கம்பி அறுந்து இரும்புத் தகடு, அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த புழலை அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகா் பகுதியைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன ஊழியா் விக்னேஷ் மற்றும் அவரது 3 வயது மகன் ஷாருக் ஈஸ்வரன் ஆகியோா் மீது விழுந்தது.
இதில், விக்னேஷ் உயிா் தப்பிய நிலையில், சிறுவன் ஷாருக் ஈஸ்வரனின் வயிற்றுப் பகுதியில் இரும்புத் தகடு விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மாதவரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும், அதிக ரத்த போக்கு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








