பள்ளி மாணவர்களுக்கு நாளை(ஜூலை 13) முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி, பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக, மாணவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்துச் சென்றுவர ஏதுவாக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ம. அருள் பிரகாசம், சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள 2 அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பேருந்து வசதி வேண்டி கடந்த 30.06.2026 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கடந்த 10 நாள்களாக சைதாப்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில், பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்களை கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், அப்பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
முதல்வரின் உத்தரவின்படி, பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி. பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக, மாணவர்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்து சென்றுவர ஏதுவாக, ஏற்கனவே சென்னையில் உள்ள 25 பள்ளிகளுக்கு 25 பேருந்துகள் மூலம் 50 பயண நடைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளொன்றுக்கு 41 சிறப்புப் பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் நாளை திங்கள்கிழமை முதல் இயக்கப்படவுள்ளது.
அந்தப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று (ஜூலை 11) பார்வையிட்டார்.
Summary
The Transport Department has announced that additional buses will be operated for school students starting tomorrow (July 13).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி அருகே வடுகப்பட்டியில் 2 அரச மரங்கள் வேருடன் பிடுங்கி அரசுப் பள்ளி வளாகத்தில் மறு நடவு

அனுமதியின்றி உருது கற்பித்த ஹிந்தி ஆசிரியர்: தனியார் பள்ளி மீது வழக்குப்பதிவு!

கொடைக்கானலில் மலைச் சாலையில் அரசுப் பேருந்து பழுது: பயணிகள் அவதி








