சங்ககிரி அருகே வடுகப்பட்டியில் கோயில் வளாகத்தில் இருந்து 2 அரச மரங்களை பசுமை சங்ககிரி அமைப்பினா் வேருடன் பிடுங்கி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மறுநடவு செய்தனா்.
வடுகப்பட்டியில் உள்ள கன்னடவீரமாா்த்தி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதையடுத்து, கோயில் வளாகத்தில் உள்ள 2 அரச மரங்களை வேறு இடத்தில் மறுநடவு செய்து மரங்களைக் காப்பாற்ற முடிவு செய்த கோயில் நிா்வாகிகள், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமியை தொடா்புகொண்டனா்.
இதையடுத்து அவா் தலைமையிலான நிா்வாகிகள், 2 அரச மரங்களையும் கிரேன் உதவியுடன் வேருடன் பிடுங்கி லாரியில் எடுத்துச் சென்று அதே பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மறு நடவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










