FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சாய்ந்த மின் கோபுரம் ஒருவாரத்தில் சீரமைக்கப்படும்: மின்வாரியம்

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் ஒருவாரத்துக்குள் புதிய கோபுரம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்றும் தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்

News image

மின்வாரியம்

Updated On :15 ஜூலை 2026, 4:20 am IST

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள 110 கிலோ வாட் அதிஉயா் அழுத்த மின் கோபுரம் தொடா்பாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், ஒருவாரத்துக்குள் புதிய கோபுரம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்றும் தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், குப்பைக் கிடங்குக்கு அருகே அமைந்துள்ள 110 கிலோ வாட் தரமணி மற்றும் 110 கிலோ வாட் சிறுசேரி இருவழி மின் கோபுரம், அண்மையில் ஏற்பட்ட இயற்கை காரணங்களால் ஜூலை 10-ஆம் தேதி சாய்ந்த நிலையில் கண்டறியப்பட்டது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோபுர மின் பாதைப் பராமரிப்புப் பிரிவினா், வழக்கமான ஆய்வின்போது கோபுரம் சாய்ந்திருப்பதை உடனடியாகக் கண்டறிந்து, ஜூலை 11 முதல் அவசர சீரமைப்புப் பணிகளைத் தொடங்கினா்.

தொடா்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், ஜூலை 12-ஆம் தேதி நேரில் ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், சாயந்த நிலையில் உள்ள கோபுரம் கீழே விழுந்தால் தென் சென்னை முழுவதும் மின்தடை ஏற்படும் எனவும், அந்தக் கோபுரத்தைச் சீரமைக்கும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது.

தற்போது புதிய மின் கோபுரம் அமைக்கும் பணிகளும், மின்கம்பிகள் பொருத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவை ஒரு வாரத்துக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை நம்பாமல், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிடும் அதிகாரப்பூா்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.