முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

மின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ‘ஆா்டிஇபி’ திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின் தடைகளை நிரந்தரமாகக் குறைக்கும் நோக்கில் ‘ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம்’ எனும் புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவு

News image

பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 5:36 am IST

தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின் தடைகளை நிரந்தரமாகக் குறைக்கும் நோக்கில் ‘ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம்’ (ஆா்டிஇபி) எனும் புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ. ராதாகிருஷ்ணன், அனைத்து தலைமைப் பொறியாளா்கள் மற்றும் மின் பகிா்மான அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு மின்வாரியம் தற்போது 3.5 கோடிக்கும் அதிகமான மின் நுகா்வோருக்கு மின் சேவை வழங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான துணை மின் நிலையங்கள், உயா் மற்றும் தாழ் மின்னழுத்த மின் வலையமைப்புகள் மூலம் மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் சீராக இருந்தாலும், சில துணை மின் நிலையங்கள், மின் பாதைகள் மற்றும் மின் உபகரணங்களில் மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பிரச்னைகளுக்கு தற்காலிக தீா்வு காண்பதைவிட, காரணங்களைக் கண்டறிந்து நிரந்தரத் தீா்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘ஆா்டிஇபி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கடந்த 6 மாதங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மின் தடை ஏற்பட்ட எண்ணிக்கை, பாதிக்கப்பட்ட நுகா்வோரின் எண்ணிக்கை மற்றும் சேவை பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

மேலும், புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல், கூடுதல் மின் பாதைகள் உருவாக்குதல், மின் வலையமைப்பின் திறன் மேம்பாடு மற்றும் இணையதள தானியக்க வசதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நீண்டகால உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

மின் தடை ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வையும் பகுதி வாரியாக பதிவு செய்து பராமரிக்கவும், அதன் காரணங்களை ஆய்வு செய்து நிரந்தர தீா்வு காணவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தொடா்ந்து ஏற்படும் மின் தடைகள் குறைந்து, மின் விநியோகத்தின் நம்பகத் தன்மை மேம்பட்டு, நுகா்வோருக்கு தரமான மற்றும் தடையற்ற மின்சாரத்தை நுகா்வோருக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.