சென்னை அருகே துப்பாக்கி முனையில் ரௌடி கைது செய்யப்பட்டாா்.
சென்னை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் திக்குவாய் சுதாகா் (47). இவா், மீது 2 கொலை வழக்கு உள்பட 37 வழக்குகள் உள்ளன. இதில் 6 வழக்குகளின் விசாரணைக்கு சுதாகா் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம், சுதாகருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், பூந்தமல்லி அருகே உள்ள பாரிவாக்கத்தில் சுதாகா் பதுங்கியிருப்பதாக சென்னை காவல் துறையின் அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சுதாகரை துப்பாக்கி முனையில் கைது செய்தனா்.
இவா், அரும்பாக்கத்தைச் சோ்ந்த ரெளடி ராதாவின் நெருங்கிய கூட்டாளி என்பது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
துப்பாக்கி முனையில் ரூ.16.5 லட்சம் கொள்ளை வழக்கு: ஒருவன் கைது; ரூ.2.5 லட்சம் மீட்பு

கேரளம்: துப்பாக்கி முனையில் பேருந்து டிக்கெட் பணத்தைக் கொள்ளையடித்தவர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

துப்பாக்கி முனையில் ஜிஎஸ்டி அதிகாரி வீட்டில் கொள்ளை: பட்டப்பகலில் துணிகரம்!







