ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் ஜிஎஸ்டி அதிகாரியின் வீட்டில் துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சதர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அப்னா கர் ஷாலிமார் குடியிருப்புப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றது. அல்வார் மாவட்டத்தில் ஜிஎஸ்டி உதவி ஆணையரின் வீட்டில் அவரது குடும்பத்தினரைத் துப்பாக்கி முனையில் மூன்று பேர் சுமார் 90 நிமிடங்கள் சிறைபிடித்தனர்.
முகமூடி அணிந்திருந்த மூன்று கொள்ளையர்களும் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்ததாகவும், காலையில் குடும்பத்தினர் வீட்டின் பிரதான கதவைத் திறந்தபோது உள்ளே நுழைந்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.
கைத்துப்பாக்கி வைத்திருந்த கொள்ளையர்கள், ஜிஎஸ்டி உதவி ஆணையர் ஓம் பிரகாஷ், அவரது மனைவி, குழந்தைகளைச் சிறைபிடித்து அவர்களைத் தாக்கி, பொருள்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தைத் தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்தியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர், தங்க நகைகள், பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். அதோடு, மூவரும் ஓம் பிரகாஷின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வதாக மிரட்டி, அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துச் சென்றதாக அவர் குற்றம் சாட்டினார்.
கொள்ளையர்களை அடையாளம் காண, அந்தக் குடியிருப்புப் பகுதி மற்றும் அருகிலுள்ள இடங்களிலிருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Three armed men allegedly held a GST assistant commissioner and his family hostage for around 90 minutes in their house in Alwar district on Saturday before fleeing with gold jewellery, cash, and other valuables, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








