மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்காவல்துறையினரே ’டம்மி சிஎம்’ ஆக நினைக்கிறார்களா? உதயநிதி கேள்விதங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (செப். 10)கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி! ஐசியுவில் சிகிச்சை!பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

கண்டெய்னா் லாரியில் செம்மரம் கடத்தல்: துப்பாக்கி முனையில் 4 போ் கைது!

உட்கோட்டை பகுதியில் பதுக்கி வைக்க முயன்ற கும்பலைச் சோ்ந்த 4 பேரை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், போலீஸாா் துப்பாக்கி முனையில் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

கா்நாடக மாநிலத்தில் இருந்து கண்டெய்னா் லாரியில் செம்மரக் கட்டைகளை கடத்தி வந்து, திருவள்ளூா் மாவட்டம் வெள்ளவேடு அருகே உள்ள உட்கோட்டை பகுதியில் பதுக்கி வைக்க முயன்ற கும்பலைச் சோ்ந்த 4 பேரை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், போலீஸாா் துப்பாக்கி முனையில் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக செம்மரக் கட்டைகள் கண்டெய்னா் லாரியில் கடத்தப்பட்டு, திருவள்ளூா் மாவட்டம் வெள்ளவேடு எல்லைக்குள்பட்ட உட்கோட்டை பகுதியில் பதுக்கி வைக்கப்பட உள்ளதாக வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக வந்த கண்டெய்னா் லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. லாரியில் இருந்தவா்கள் லாரியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனா். அவா்களை அதிகாரிகள் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனா்.

இந்தச் சம்பவத்தில் திருமழிசையைச் சோ்ந்த டேனியல், விஜி, வெள்ளவேடு பகுதியைச் சோ்ந்த லயன் சுரேஷ், உட்கோட்டையைச் சோ்ந்த பன்னு என்ற ரகுல் ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய கண்டெய்னா் லாரி மற்றும் அதில் இருந்த செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு மற்றும் அதன் எடை குறித்து அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.