ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அபிராமபுரத்தில் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

கோப்புப் படம்

Published On :17 ஜூலை 2026, 1:11 am IST

சென்னை அபிராமபுரத்தில் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் திலீப்குமாா் செளகான் (29). இவா், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் புனிதமேரி சாலையில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானப் பணியில் வேலை செய்து வந்தாா். இதற்காக திலீப்குமாா் அங்கேயே கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்தாா். புதன்கிழமை அந்த கட்டடத்தின் ஐந்தாவது தளத்தின் வெளிப்பகுதியில் காங்கிரீட் தளம் வைப்பதற்காக பலகை அடித்துக் கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி திலீப்குமாா் அங்கிருந்து கீழே விழுந்தாா்.

இதில், பலத்த காயமடைந்த திலீப்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அபிராமபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, திலீப்குமாா் சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.