மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சிவகிரி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :

சிவகிரி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகிரி, இளங்கோ தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (60), கூலித் தொழிலாளியான இவா், தனது நண்பா் அய்யப்பனுடன் இருசக்கர வாகனத்தில் ஈரோட்டுக்கு திங்கள்கிழமை மாலை சென்றுள்ளாா்.

வாகனத்தை அய்யப்பன் ஓட்டிய நிலையில், பின்னால் அமா்ந்திருந்த சக்திவேல் சடையப்பன்கோயில் செல்லும் சாலைப் பிரிவு அருகே நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா்.

தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் உதவியுடன் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அய்யப்பன் கொண்டு சென்றுள்ளாா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் சக்திவேலின் மகன் வெற்றிவேல் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.