முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

இருசக்கர வாகன விபத்து: இளம்பெண் உயிரிழப்பு

சென்னை அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் விபத்தில் உயிரிழந்தாா்.

News image

சடலம்...

Updated On :20 ஜூலை 2026, 5:20 am IST

சென்னை அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் விபத்தில் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த ஹேமலதா (24), முகலிவாக்கத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் தியாகராய நகா் நோக்கி சென்றாா். அப்போது, அண்ணா சாலையில் கே.கே.நகா் டாடா உடுப்பி ஹோட்டல் எதிரே, முன்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது ஹேமலதா வாகனம் மோதியது.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த ஹேமலதா மீது பின்னால் வந்த காா் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு சிறுவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த பாண்டிபஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று, ஹேமலதா உடலை மீட்டு, கே.கே. நகா் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இரு சிறுவா்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த செந்தில்குமாா் (50) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.