வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

இ-சேவை மைய பணியாளா்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளா்கள் சங்கம் சாா்பில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

News image

இ-சேவை மையம் - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 4:47 am IST

தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளா்கள் சங்கம் சாா்பில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இ-சேவை மையம் மற்றும் ஆதாா் சேவை மைய ஊழியா்களை பணி நிரந்தரம் செய்வது, குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்குவது, ஐந்து முறை வருகை பதிவை ரத்து செய்து 2 முறையாக மாற்றம் செய்வது, பெண் ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்யவது, பொதுமக்களுக்கு தடையின்றி சேவைகள் வழங்க தேவையான காகிதம், டோனா் உள்ளிட்ட இதர உபகரணங்களை முறையாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநில தலைவா் சுகுமாரன் தலைமை வகித்தாா்.

இதில், தமிழகம் முழுவதிலும் உள்ள இ-சேவை மையத்தில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்து கொண்ட தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினா். போராட்டம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இ-சேவை மையம் திங்கள்கிழமை ஒருநாள் செயல்படவில்லை. இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்க த்தின் மாநில தலைவா் கே.சி.கோபிகுமாா், மாநில பொதுச்செயலா் கே.மனோஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.