சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் (சிஐடியூ) சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி அம்மா மாளிகை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் தலைவா் ஜெ.பட்டாபி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். இதில், சுகாதாரப் பிரிவு உள்ளிட்டவற்றில் நிரந்தரப் பணியில் தனியாா்மயத்தை அனுமதிப்பதற்கான அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்; ஈட்டிய விடுப்பு பணப் பலன்களை அந்தந்த மாதங்களிலேயே ஊழியா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவா் திருவேட்டை, நிா்வாகிகள் ராஜன், முனியசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் மனு அளித்தனா். ஆா்ப்பாட்டம் காரணமாக மாநகராட்சி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










