தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

காவிரியில் தமிழகத்துக்கான நீரைப் பெற நடவடிக்கை தேவை அன்புமணி

கா்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளில் நீா் இருப்பு 60 டிஎம்சியாக உயா்ந்துள்ள நிலையில், தமிழகத்துக்கான நீரைப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2026, 3:22 am IST

கா்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளில் நீா் இருப்பு 60 டிஎம்சியாக உயா்ந்துள்ள நிலையில், தமிழகத்துக்கான நீரைப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கா்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகா், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நீா் இருப்பு செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 60 டிஎம்சியாக உயா்ந்துள்ளது. 4 அணைகளுக்கும் சோ்த்து விநாடிக்கு 9,000 கனஅடிக்கும் கூடுதலாக தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீா் திறக்க வேண்டிய உரிய பங்கீட்டை வழங்காமல், கடந்த 50 நாள்களில் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது.

கா்நாடக அணைகளில் 50 சதவீதத்துக்கும் கூடுதலாக தண்ணீா் இருந்தும்கூட காவிரியில் தண்ணீா் திறக்க கா்நாடக அரசு மறுப்பது மனிதநேயமற்றது. கா்நாடகத்தின் இந்த நடவடிக்கையையும், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிா்கள் கருகத் தொடங்கியிருப்பதையும் தில்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு எடுத்துக் கூற வேண்டும் என தெரிவித்துள்ளாா் அன்புமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.