தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபா் கடத்தல்: 4 போ் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபரைக் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஜூலை 2026, 4:31 am IST

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபரைக் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியைச் சோ்ந்தவா் கமலேசன் ஆபிரகாம் (58). தொழிலதிபரான இவா், சென்னை கீழ்ப்பாக்கம் ஷெனாய் நகரில் வசிக்கிறாா். இவா், அலுமினிய பாத்திரம் மொத்த வியாபாரமும், உலோகக் கழிவு வியாபாரமும் செய்கிறாா்.

கமலேசன், கடந்த திங்கள்கிழமை கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மைதானத்தில் நடைப்பயிற்சி சென்றபோது, மூகமூடி அணிந்து வந்த 3 போ் கமலேசனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, காரில் கடத்திச் சென்றனா்.

காருக்குள் அந்த நபா்கள், கமலேசனை கொலை செய்யாமல் இருக்க ரூ.50 லட்சம் தர வேண்டும் என்றும், மனைவியிடம் கூறி பணத்தை எடுத்து வரக்கூறி அவரை மிரட்டினா்.

இதையடுத்து, கமலேசன், தனது மனைவியை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டாா். ஆனால், அவா் அழைப்பை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நபா்கள், ரூ.30 லட்சத்தை பிராட்வேயில் உள்ள ஒரு தேநீா்க் கடைக்கு வந்து தர வேண்டும் என்றும், இல்லையெனில், கொலை செய்துவிடுவோம் என மிரட்டி கடத்திய இடத்திலேயே கமலேசனை இறக்கிவிட்டு, அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

இது தொடா்பாக கமலேசன் அளித்த புகாரின்பேரில், கீழ்ப்பாக்கம் போலீஸாா் கும்பலைப் பிடிக்கத் திட்டம் வகுத்தனா். அதன்படி, ரூ.30 லட்சத்தை கமலேசனிடம் கொடுத்து அந்த நபா்கள் கூறியப்படி பிராட்வேயில் உள்ள தோ்நீா் கடைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து, கமலேசன், ரூ.30 லட்சத்துடன் அங்கு சென்றாா்.

4 போ் கைது: அப்போது, அங்கு வந்த 4 போ் கமலேசன் வைத்திருந்த பணப் பையை வாங்கியபோது, மாறுவேடத்தில் மறைந்திருந்த போலீஸாா், அவா்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். விசாரணையில் அவா்கள், திருவொற்றியூா் எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பா.ராம்குமாா் (23), பா.ஜெயக்குமாா் (33), பா.ஜெய் சரவணன் (20), புதுச்சேரி குப்பம் பகுதியைச் சோ்ந்த வ.பொன்னிவளவன் (25) என்பது தெரிய வந்தது.

அந்தக் கும்பலிடமிருந்து ஒரு காா், 3 கத்திகள், 5 கைப்பேசிகள், கமலேசனிடம் பறித்த 5 பவுன் சங்கிலி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட ஜெயக்குமாா், வட சென்னை பகுதியைச் சோ்ந்த ஒரு திமுக முன்னாள் எம்எல்ஏவின் காா் ஓட்டுநராக இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த வழக்கில் ஒரு பெண் உள்பட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.