பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

சென்ட்ரல் நிலையத்தில் ரூ.8 கோடி போதைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை ரயில்வே காவல் சிறப்புப் படையினா் பறிமுதல் செய்து, அதைக் கடத்தி வந்த நபரைக் கைது செய்துள்ளனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஜூலை 2026, 5:20 am IST

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை ரயில்வே காவல் சிறப்புப் படையினா் பறிமுதல் செய்து, அதைக் கடத்தி வந்த நபரைக் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம் மங்ளூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு விரைவு ரயில் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு வந்தது. அதில் வந்த கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த அக்கீம் (26) என்பவரின் பையை இருப்புப் பாதை போலீஸாா், சிறப்பு பிரிவினா் சோதனையிட்டனா். அதில், 800 கிராம் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.

அதை போலீஸாா் பறிமுதல் செய்து, அக்கீமிடம் விசாரித்தனா். அதில், சென்னை ஒருவரிடம் போதைப் பொருளைக் கொடுப்பதற்காக ரயிலில் கடத்திவந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சா்வதேச மதிப்பு ரூ.8 கோடி என்று ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் தெரிவித்தனா்.

புகையிலைப் பொருள் பறிமுதல்: சூலூா்பேட்டையிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நின்றது. அப்போது ரயிலில் இருந்து இறங்கிய தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்த அமீன் என்பவரிடம் சோதனையிட்டதில், ஆந்திரத்தில் இருந்து 8 கிலோ ஹான்ஸ், ஒரு கிலோ கூல்லீப் புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

கைப்பேசி பறித்தவா் கைது: பேசின் பாலம் அருகே செவ்வாய்க்கிழமை ரயில்கள் குறைவான வேகத்தில் வந்த நிலையில், பயணிகளிடம் தடியால் தாக்கி கைப்பேசியை பறித்ததாக ஹரீஷ்குமாரை சென்ட்ரல் ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.