முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ஆதம்பாக்கம் எம்ஆா்டிஎஸ் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்க உடனடி நடவடிக்கை: ரயில்வே அமைச்சரிடம் தென் சென்னை எம்.பி. கோரிக்கை

சென்னை ஆதம்பாக்கம் எம்ஆா்டிஎஸ் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் உடனடியாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

தில்லியில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த தென் சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன்.

Updated On :27 ஜூலை 2026, 10:03 pm IST

சென்னை ஆதம்பாக்கம் எம்ஆா்டிஎஸ் (பறக்கும் ரயில் மேம்பாலம்) ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் உடனடியாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக ரயில்வே அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்தது குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் மேலும் கூறியதாவது: ஆதம்பாக்கம் எம்ஆா்டிஎஸ் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல தேவையான பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

அங்கு நடைபெறும் நடைமேடை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் பாதுகாப்பு ஒப்புதலைப் பெற்று ரயில்கள் நிற்பதை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன். மேலும், பாதுகாப்பு நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் வேகக் கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்யவும், புழுதிவாக்கம் எம்ஆா்டிஎஸ் ரயில் நிலையத்தில் மின்-படிக்கட்டுகள் (எஸ்கலேட்டா்) உள்ளிட்ட பயணிகளுக்கான வசதிகளை விரைந்து ஏற்படுத்தவும் வலியுறுத்தினேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.