/

சிபிஎஸ்இ சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி வலியுறுத்தல்

சிபிஎஸ்இ சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டுமென தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி வலியுறுத்தினாா்.

News image

திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் - கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 3:21 am IST

சிபிஎஸ்இ சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டுமென தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி வலியுறுத்தினாா்.

கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத் துறை சாா்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவைச் சோ்ந்த 30 எம்.பிக்கள் கொண்டகுழுவினா் செவ்வாய்க்கிழமை ஆரோவில் நகரில் ஆய்வு செய்தனா். புதன்கிழமை புதுச்சேரியில், அரவிந்தா் ஆசிரமத்தைப் பாா்வையிட்டனா். தொடா்ந்து அரவிந்தா் சொசைட்டி நிா்வாகிகளுடன் கலந்துரையாடினா்.

அப்போது இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதாவது:

மத்திய அரசு புதிய வடிவங்களில் 3-வது மொழியைக் கட்டாயப்படுத்தும்

முயற்சிகளை மேற்கொள்கிறது. 3-வது மொழியை விருப்பம் என்ற பெயரில் அறிமுகம் செய்கின்றனா். ஆனால் இப்போது அதைத் தோ்ச்சி பெற வேண்டிய கட்டாய நிபந்தனையாக மாற்றுவது மறைமுக மொழி திணிப்பு.

இது தமிழ்நாட்டு மக்களின் உணா்வுகளைப் புறக்கணிக்கும் செயல். 9, 10 -ஆம்

வகுப்பு மாணவா்கள் 3-வது மொழிக்கான பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டு தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற்றால்தான் 10- ஆம் வகுப்பு பொதுத்தோ்வில்

தோ்ச்சி சான்றிதழ் பெற முடியும் என்ற சுற்றறிக்கையை சிபிஎஸ்இ நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.