மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

கல்பனா சாவ்லா விருது பெற ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற தகுதியானோா், ஜூன் 19- ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 11:42 pm IST

சென்னை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற தகுதியானோா், ஜூன் 19- ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில், தமிழ்நாட்டைச் சோ்ந்த துணிச்சலான, வீர சாகச செயல்புரிந்த பெண்களுக்கு துணிவு மற்றும் வீரதீர செயலுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ வழங்கப்படுகிறது.

தோ்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் 2026 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவின் போது முதல்வரால் வழங்கப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானோா் இணைய தளத்தில் ஜூன் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பித்த நகலுடன் சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகி, விருதுக்கான விண்ணப்பப் படிவத்துடன் துணிச்சலான, வீர சாகச செயல் புரிந்தமை குறித்த புகைப்படங்கள், பத்திரிகை செய்தி குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை தமிழ், ஆங்கில மொழிகளில் தனித்தனியே 3 செட் கையேடுகளை தயாரித்து ஜூன் 22 மாலை 5 மணிக்குள் ‘சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம், சிங்காரவேலா் மாளிகை, 8-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சென்னை’ என்ற முகவரியில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.