உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்!

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 4:44 am IST

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசால் கல்பனா சாவ்லாவின் நினைவாக, அவரது துணிச்சலான செயல்களைப் பாராட்டும் வகையில் துணிச்சலான பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது, ஒவ்வோா் ஆண்டும் சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தைச் சோ்ந்த துணிச்சலான மற்றும் சாதனை புரிந்த பெண்மணிக்கு, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ. 5 லட்சம் பணப் பரிசாக வழங்கப்படும்.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் பெண் தமிழகத்தில் பிறந்தவராகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். ஒரு பக்கத் தாளில் அந்த நபரைப் பற்றியும், அவரது துணிச்சலான முயற்சிகள் பற்றியும் தமிழில் மருதம் மற்றும் ஆங்கிலத்தில் யங்ழ்க்ஹய்ஹ எழுத்துருவில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அந்நபரின் சுய விவரம் மற்றும் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், படிவம் முழுமையாக நிரப்பப்பட்டு இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரரின் சுயசரிதை தரவு மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக விண்ணப்பதாரரின் பெயா், பிறந்த தேதி, முகவரி, கல்வித் தகுதி, துணிச்சலான செயல் குறித்த விவரங்கள், நிழற்படங்கள், விருது பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் போன்ற முழு விவரங்களுடன் ஜூன் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, அதன் கருத்துருவை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628 101 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.