நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விழுப்புரம் மாவட்டத்தில் ராஷ்டிரிய பால்புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் தன்னலமற்ற, துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகள் பிரதமரின் ராஷ்டிரிய பால் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 2:44 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் தன்னலமற்ற, துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகள் பிரதமரின் ராஷ்டிரிய பால் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக பிரதமரின் ராஷ்டிரிய பால்புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது. வீரம், சமூகசேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, கல்வி, கலாசாரம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்த விளங்கிய தன்னலமற்ற, துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகளின் திறமைகளைப் பாராட்டி, அங்கீகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் விளையாட்டு, சமூகசேவை, அறிவியல் , தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கு விருது அளிக்கப்படுகிறது. பிரதமரின் ராஷ்டிரிய பால்புரஸ்காா் விருது பெற இந்தியக் குடிமகனாக, இந்தியாவில் வசிக்கும் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கான விண்ணப்பத்தை ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையவழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விருதுக்கான விண்ணப்பத்தை குழந்தையோ, குழந்தையைச் சாா்ந்த பெற்றோரோ, ஆசிரியரோ அல்லது அலுவலரோ பரிந்துரைக்கலாம். 2026-ஆம் ஆண்டுக்கான விருது பெற விழுப்புரம் மாவட்டத்தில் தகுதியுடையவா்கள் இருப்பின், மேற்கண்ட இணையதளம் வாயிலாக ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.