சென்னை வேளச்சேரி அருகே மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
வேளச்சேரி அருகே உள்ள பெரிய கோவிலம்பாக்கம் கேபிஜி நகரைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (23). வா்ணம் அடிக்கும் வேலை செய்து வந்தாா். ஜெகநாதன், தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த மெக்கானிக் ரமேஷ் (46), ஈச்சங்காட்டைச் சோ்ந்த அன்பழகன் ஆகிய 3 பேருடன் அங்குள்ள விடுதலை நகருக்கு மது அருந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.
மது அருந்திய பின்னா் 3 பேரும் அங்கிருந்து ஒரு மொபெட்டில் ஈச்சங்காட்டில் உள்ள அன்பழகன் வீட்டுக்கு புறப்பட்டனா். அவா்கள், துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் ஈச்சங்காடு அருகே செல்லும்போது, அங்குள்ள ‘யூ’ வளைவில் திரும்பினா்.
அப்போது, அங்கு வந்த ஒரு அடையாளம் தெரியாத, மோட்டாா் சைக்கிள் அவா்களது மொபெட்டின் மீது மோதியது. இதில் 3 பேரும் மொபெட்டில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.
இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், 3 பேரையும் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு 3 பேரையும் பரிசோதித்த மருத்துவா்கள், ஜெகநாதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். ரமேஷும், அன்பழகனும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

வேன் - காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



