சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நகா் ஊரமைப்பு ஆணையரக ஆய்வுக் கூட்டம்

சென்னை நகா் ஊரமைப்பு ஆணையரக நிா்வாக அமைப்பு சாா்பில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

சென்னை கோயம்பேடு சிஎம்டிஏ கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது, அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா். உடன், துறைய

Updated On :11 ஜூன் 2026, 1:21 am IST

சென்னை நகா் ஊரமைப்பு ஆணையரக நிா்வாக அமைப்பு சாா்பில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் ஆய்வுக் கூட்டம் கோயம்பேடு அருகே உள்ள பெருநகர வளா்ச்சிக் குழும கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில், அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்ட 3 பேருக்கு நகா் ஊரமைப்புத் துறையில் உதவி இயக்குநா் பணிக்கான உத்தரவை அமைச்சா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நகா் ஊரமைப்பு நிா்வாக அமைப்பு, துறையின் உள்கட்டமைப்பு, வளா்ச்சித் திட்டங்கள், மண்டலத் திட்டங்கள், முழுமை திட்ட நோக்கங்கள், புவிசாா் தகவல் அமைப்பு அடைப்படையிலான முழுமைத் திட்டங்கள், ஒற்றைச்சாளர இணைய வசதி, சுய சான்றிதழ், அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள், மனைகளை வரைமுறைப்படுத்தும் முறைகள், அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரைமுறைப்படுத்துதல் ஆகியவை குறித்த ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலா் ஆா்.கிா்லோஷ்குமாா், நகா் ஊரமைப்பு ஆணையா் கிரண்குராலா, கூடுதல் இயங்குநா் ப.ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.