பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

திருப்பதி - காட்பாடி மெமு ரயில்கள் 8 நாள்கள் ரத்து!

திருப்பதி-காட்பாடி இடையேயான மெமு ரயில்கள் வரும் 19-ஆம் தேதி முதல் 8 நாள்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 3:48 am IST

திருப்பதி-காட்பாடி இடையேயான மெமு ரயில்கள் வரும் 19-ஆம் தேதி முதல் 8 நாள்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதி-காட்பாடி இடையேயான பகுதிகளில் தண்டவாள, தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஜூன் 19, 22, 26, 29, ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் திருப்பதியில் இருந்து காலை 6.40, 10.35 மணிகளுக்கு காட்பாடிக்கு புறப்படும் பயணிகள் மெமு ரயில்களும், மறுமாா்க்கமாக அதேநாள்களில் காட்பாடியில் இருந்து மாலை 5.15, இரவு 7.25 மணிக்கு திருப்பதி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

பகுதியளவு ரத்து: அதேபோல், அந்த நாள்களில் விழுப்புரத்தில் இருந்து காலை 5.40 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் விரைவு ரயில் (எண்:16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:16853) திருப்பதிக்குப் பதிலாக காட்பாடியில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.